• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இஸ்லாமிய பயங்கரவாதிகளை கண்டித்து கண்டன அறிக்கை!

ByKalamegam Viswanathan

Apr 22, 2025

இன்று ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுள்ள சென்றிருந்த கர்நாடாக,குஜராத்,
மஹாராஷ்டிரா உள்பட தமிழகத்தை சேர்ந்த சுமார் 25க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொடூரமாக சுட்டு கொன்ற மதவெறி பிடித்த தேசவிரோத இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கோழை தனத்தை இந்துமக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

பாகிஸ்தானின் தலைமையிடமாக கொண்டு இயங்கும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) என்ற இந்த பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் பொழுது நீ இந்து தானா என கேட்டு இந்துக்களை குறிவைத்து கொடூரமாக சுட்டு கொன்றது மட்டுமல்லாமல் இதை மோடியிடம் போய் சொல் என்று பயங்கரவாதிகள் கூறியது மதவெறி பிடித்த தேசவிரோத இஸ்லாமிய பயங்கரவாதத்தை காட்டுகிறது.

மேலும் இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா நாட்டில் சிவப்பு கம்பளம் விரித்து பாரத பிரதமர் மோடிஜீ அவர்களுக்கு இன்று அந்நாட்டு அரசாங்கம் வரவேற்பு அளித்ததையும், வக்ஃபு சட்டத்திருத்தம் இந்தியாவில் இயற்றியதையும், அமெரிக்கா துணை அதிபர் இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளதையும் பொறுத்து கொள்ள முடியாமல் இந்துக்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தியது போல் சந்தேகம் எழுகிறது.

ஜம்மு காஷ்மீரில் சுற்றுள்ளா சென்ற தமிழக மக்கள் உள்பட வடமாநிலத்தை சேர்ந்த அப்பாவி மக்களை மதம் பார்த்து இந்துக்கள் மீது கொடூரமாக சுட்டு கொன்று தாக்குதல் நடத்திய மனித மிருகமான மதவெறி பிடித்த தேசவிரோத இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு தக்கப்பாடம் புகட்ட வேண்டும்.
காஷ்மீரில் பயங்கரவாதமும், பயங்கரவாதிகளையும் ஒழிக்கப்படவேண்டும்.
இதுபோன்று பயங்கரவாதிகளுக்கு மத ரீதியாகவும்,ஓட்டு வங்கிக்காகவும் துணைபோகும் பல்வேறு போர்வையில் ஒழிந்திருக்கும் தேசதுரோகிகளை நாடு கடத்தப்பட வேண்டும்.

மணிப்பூர், முதல் மியான்மர் , சிரியா,காசா வரை எங்கேனும் சிறுபான்மையினருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் உடனே தமிழகத்தில் கண்டனம் தெரிவித்து முதல் ஆளாக குரல் கொடுக்கும் இங்குள்ள தமிழக அரசியல்வாதிகள் காஷ்மீரில் வடமாநிலத்தை சார்ந்தவர்களை மட்டுமல்ல தமிழகத்தை சார்ந்தவர்களையும் மனிதாபிமானமற்ற முறையில் மதம் பார்த்து சுட்டு கொன்று கொடூர தாக்குதல் நடத்திய மதவெறி பிடித்த இஸ்லாமிய பயங்கரவாதிகளை கண்டிக்க முன்வரவேண்டும்.