• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திமுக அரசின் டாஸ்மாக் ஊழலை மக்களிடம் தெரிவிக்கும் மாநில செயலாளர் மலர்க்கொடி

ByAnandakumar

Mar 15, 2025

100% மதுபான பாட்டில்களுக்கு 60% மதுபான பாட்டில்களே கணக்கு காட்டப்படுவதாகவும் மீதமுள்ள 40% கணக்கில் வருவதில்லை. கள்ளத்தனமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது என மாநில செயலாளர் மலர்க்கொடி செய்தியாளர்களுக்கு பேட்டி.அளித்துள்ளார்.

திமுக அரசின் டாஸ்மாக் ஆயிரம் கோடி ஊழலை மக்களிடம் தெரிவிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் மாநில செயலாளர் மலர்க்கொடி மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்பொழுது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில செயலாளர் மலர்க்கொடி

டெல்லி மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தில் மதுபானத்தில் ஊழல் நடந்திருக்கிறது.

இன்று அதையும் மீறி தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது அமலாக்க துறையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு ஊழல் திமுக அரசு அவலங்களை வெளியே கொண்டு வர வேண்டும் யார் நம்மை கண்டுபிடிக்க போகிறார்கள் யார் நம்மை கண்டுபிடிக்க முடியும் என்ற இந்த அளவிற்கு ஊழல் பண்ணி கொண்டிருக்கிறார்கள். தமிழக மாநிலத் தலைவராக அண்ணாமலை இருக்கிறார் இது எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டுவார் என்பதை மறந்து விட்டார்கள்

சட்டீஸ்கரில் மிகப்பெரிய அளவில் மதுபான ஊழல் நடந்திருக்கிறது

சர்க்காரியா கமிஷனில் சர்க்கரை எறும்பு சாப்பிட்டு விட்டது சாக்கை கரையான் சாப்பிட்டு விட்டது அந்த காலத்திலேயே ஊழல் செய்தவர்கள் தான் திமுகவினர் அதேபோல டாஸ்மாக்கிலும் ஊழல் செய்திருக்கிறார்கள் என்றார்.

நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டு 465 நாள் சிறைவாசத்தில் இருந்த ஜாமினில் வெளிவந்த திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளை போல வரவேற்றனர்.

மீண்டும் அமைச்சர் பதவியை அவருக்கு கொடுத்து இன்றைக்கு இந்த டாஸ்மாக்கில் பதவி அளித்தது ஏன் என்பது தற்பொழுது புரிய வருகிறது.இந்தத் துறையை லாபகரமாக நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ நடத்தவில்லை திமுகவில் குடும்பத்திற்கு நடத்திக் கொடுத்திருக்கிறார்.

நீதிமன்றமே நீங்கள் இன்றும் அமைச்சராக இருக்கிறீர்களா என்று கேட்கும் அளவிற்கு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய இந்த திராவிட கட்சி டாஸ்மாக்கில் மக்களே நினைத்துப் பார்க்காத அளவிற்கு கொள்ளையடித்திருக்கிறார்கள்.

100% மதுபான பாட்டில்களுக்கு 60% மதுபான பாட்டில்களே கணக்கு காட்டப்படுவதாகவும்மீதமுள்ள 40% கணக்கில் வருவதில்லை. கள்ளத்தனமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது4 அரசு மதுபான பார்களுக்கு அனுமதி அளித்துவிட்டு 10 மதுபான பார்கள் அனுமதி இன்றி செயல்பட்டு வருகிறது.

ஏழைகள் வாங்கும் மதுவிற்கு கூட பாட்டிலில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வீதம் அதிகப்படியாக வைத்து விற்பனை செய்து வருகிறார்கள் என்றார்.