ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி என இரு பதக்கங்களை பெற்ற உசிலம்பட்டி மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியானது ஈரோட்டில் புன்ஜெய் ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றனர்.

இந்நிலையில் இதில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ரஞ்சித் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் கலந்து கொண்ட உசிலம்பட்டி சேர்ந்த மருது ஜீ அவர்கள் மகன் வசந்த் ஸ்கேட்டிங் போட்டியில் 100 மீட்டர், மற்றும் 200 மீட்டர் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கு பெற்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். இவர் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ம் வகுப்பு பயின்று வருகிறார்.,இதனால் உசிலம்பட்டிக்கு பெருமை சேர்த்துள்ளதால் மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.,