• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு தளபதி ஸ்டாலின் கராத்தே சங்கம் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி

ByJawahar

Jan 22, 2023

முசிறி துறையூரில் தமிழ்நாடு தளபதி ஸ்டாலின் கராத்தே சங்கம் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி.நடைபெற்று.
முசிறி துறையூர் ரோட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு தளபதி ஸ்டாலின் கராத்தே சங்கம் சார்பாக தளபதி ஸ்டாலின் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. 15க்கும் மேற்பட்ட மாவட்டத்திலிருந்து 600 வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் துவக்கு விழாவில் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் உட்பட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை முசிறி தலைமை பயிற்சியாளர் நடராஜன் மற்றும் தமிழ்நாடு தளபதி ஸ்டாலின் கராத்தே சங்க நிறுவனர் தனசேகரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசும் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டன.