• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சென்னையில் மாநில அளவிலான மாற்று திறனாளிகள் போட்டி- வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

சென்னையில் நடைப்பெற்ற மாநில அளவிலான மாற்று திறனாளிகள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு உதகை சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் உதகை முள்ளிக்கொரை பகுதியில் இயங்கி வரும் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்தவர்களும், குன்னூர் அறிஞர் அண்ணா பள்ளியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு ஆகினர்.
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் இல்லத்தில் தங்கி இருக்கும் நாகராஜ் 100 மீட்டர் நடை பயண போட்டியில் முதலிடமும், குன்னூர் அறிஞர் அண்ணா மாற்றுத்திறனாளிகள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த கிஷோர் கிரிக்கெட் பந்து வீச்சு போட்டியில் முதலிடம், அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்த பார்வையற்றவர் குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் பெற்றார்.


மேலும் குண்டேறிதல் 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைப்பயணம் போன்ற போட்டிகளில் குன்னூர் அறிஞர் அண்ணா மாற்றுத்திறனாளிகள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த ஐந்து மாணவ, மாணவிகள் முதலிடம் பெற்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாற்று திறனாளிகள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிலையில் இன்று மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரீததை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.