• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

இளையவர்களுக்கான மாநில ஹாக்கி சாம்பியன் போட்டி..,

BySeenu

Apr 27, 2026

இளையவர்களுக்கான மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஹாக்கி சாம்பியன் சுகுணா கோப்பை 2026 போட்டி வரும் ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சுகுணா கோப்பை 2026 போட்டி கோவை ஆர்.எஸ் புரம் ஹாக்கி மைதானத்திலும் மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை என மூன்று மைதானங்களில் ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை ஹாக்கி போட்டியானது நடைபெற உள்ளது.தொடர்ந்து இறுதிப் போட்டியானது கோவை ஆர்.எஸ் புரம் ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது.

அதற்கான பயிற்சி கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் காலை மற்றும் மாலை என வீரர்கள் தீவிர பயிற்சி வருகின்றனர்

.இது குறித்து ஹாக்கி அசோசியேசன் நிர்வாகிகள் கூறுகையில்:-
இளையவர்களுக்கான நடைபெறும் ஹாக்கி போட்டியில் தமிழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 35 அணிகளில் 700-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெரும் அணிகள் மற்றும் வீரர்கள் தேசிய சாம்பியன்ஷிப்-பில் கலந்து கொள்வதற்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கும் எனவும் இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமை வெளிப்படுத்த இந்த போட்டி ஒரு அனுபவத்தை பெற்று தேசிய அளவில் தமிழ்நாடு ஹாக்கின் வெற்றி தொடர இந்த சாம்பியன்ஷிப் போட்டி ஒரு வாய்ப்பாக அமையும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.