• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்..,

ByP.Thangapandi

Jul 19, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட தனியார் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது., இந்த முகாமில் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்ற சூழலில், பொதுமக்கள் அளித்த மனுக்களை பதிவேற்றம் செய்ய இணையதள வசதி கோளாரால் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு ஒப்புகை சீட்டு கூட வழங்க முடியாத நிலை நீடித்தது.

இந்நிலையில் 1,2 வது வார்டு பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே இன்று மனுக்கள் பெற படுவதாகவும், கிராமப்புற மற்றும் மற்ற வார்டு பகுதி மக்களின் மனுக்கள் வாங்க மாட்டோம் என அதிகாரிகள் தெரிவித்த சூழலில், முகாமிற்கு வந்த பொதுமக்கள் செய்வதறியாது திரும்பி சென்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன் உசிலம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், பொதுமக்கள் முகாம்களை தவற விட்டுவிட்டால் 45 நாட்கள் நடைபெறும் எந்த முகாமிலும் கலந்து கொண்டு மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என பேசிய சூழலில், இன்று பொதுமக்கள் அலைக்கழிப்பு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை வழங்கி மனுக்களை பெற்று விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே அனைத்து பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.