மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் வாடிப்பட்டி சாலையில் அமைந்துள்ள கலைவாணி பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் வட்டார மருத்துவ அலுவலர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

முகாமில் பல்வேறு மருத்துவ தேவைகளுக்கான சிகிச்சை முறைகளும் ஆலோசனைகளும் மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் கொத்தாலம் செந்தில்வேல் குருசாமி, பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின், திமுக நிர்வாகிகள் சங்கங்கோட்டை சந்திரன் கண்ணதாசன், பேரூர் மாணவர் அணி கார்த்திக், ராம்குமார், திருவேடகம் ராஜா என்ற பெரிய கருப்பன் எஸ் எம் பாண்டியன் மருத்துவ பணியாளர்கள் வட்டார மருத்துவ அலுவலர் ஹரிஷ் நிர்மல் குமார் நலம் காக்கும் கல்வி அலுவலர் முத்துவேல் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மருத்துவ அலுவலர்கள் சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் உதவியாளர்கள் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகள் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்




