• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்..,

ByKalamegam Viswanathan

Nov 30, 2025

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் ஊராட்சி தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை ஏற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் முத்துராமன் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன், செல்லம்பட்டி வட்டாரம் மருத்துவ அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பொது மருத்துவம் கண் மருத்துவம் ரத்த பரிசோதனை சர்க்கரை பரிசோதனை, உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளுக்கு முதல் உதவி சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கப்பட்டது. வட்டார மருத்துவ பணியாளர்கள் சீமானுத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டி, மாவட்ட விவசாய அணி பிடி மோகன், விக்கிரமங்கலம் திமுக கிளைச் செயலாளர் பாண்டி, கீழப்பட்டி சுரேஷ், மூக்கன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விக்கிரமங்கலம் ஊராட்சி செயலாளர் தனபாண்டியன் நன்றி கூறினார்.