• Thu. Jun 11th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

கொட்டாரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,

கொட்டாரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இப்பேரூராட்சியின் 1 முதல் 8 வார்டுகளுக்கான பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்றனர். பேரூராட்சி தலைவர் செல்வகனி குத்து விளக்கேற்றி முகாமை தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, கொட்டாரம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) சே.சதீஷ் நந்தகுமார், பேரூராட்சி துணைத்தலைவர் விமலா மதி, கவுன்சிலர்கள் செல்வன், பொன்முடி, சரோஜா, கொட்டாரம் பேரூர் திமுக செயலாளர் எஸ்.வைகுண்டபெருமாள், மாவட்ட பிரதிநிதி வினோத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன். ஜான்சன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜானி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திரளாக மக்கள் பங்கேற்றுள்ளனர்.