தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஆவிட நல்லவிஜயபுரம் புலவன் காடு வெள்ளூர் ஆகிய ஊராட்சி சார்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் பாப்பாநாட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

இதில் ஆம்பல் ஒன்றிய துணைச் செயலாளர் கலைவாணன் பொருளாளர் ஜெயராமன் ஒன்றிய இளைஞரணி அவைத்தலைவர் ஆம்பல் குணசேகரன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெள்ளூர் மூர்த்தி பாப்பாநாடு சிவராஜா கலை இலக்கிய பேரவை தங்கவேலு ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்
இந்த முகாமில் மாற்றுத்திறனாளி நலத்துறை, காவல்துறை, வேளாண் துறை, தொழிலாளர் மற்றும் அமைப்பு சாராத்துறை, கூட்டுறவுத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மின்சார நல வாரியம், மற்றும் 46 அரசு நலத்துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று தீர்வு காண வேண்டிய மனுக்களுக்கு உடனடியாக தீர்வு அளித்தனர் இந்த நிகழ்ச்சியில் பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டு மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். இதில் தஞ்சாவூர் மாவட்ட கலால் உதவி ஆணையர் ரேணுகாதேவி ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பெறப்படும் மனுக்களுக்கு ரசீதுகள் வழங்கப்படுகின்றனவா என்று ஆய்வு செய்தனர்
இந்த நிகழ்ச்சியை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ராஜா, விஜய், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, திராவிட நல்ல விஜயாபுரம் ஊராட்சி செயலாளர் நடராஜன் புலவன் காடு ஊராட்சி செயலாளர் ராம் சுந்தர் வேலூர் ஊராட்சி செயலாளர் குமர குரு பகவன் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்கின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)