கரூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடத்துவதற்கு 179 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டது.

இவற்றில் நேற்று வரை 102 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் மூலம் 73 ஆயிரத்து 917 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 23 ஆயிரத்து 194 மனுக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, விரிவான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், தற்போது வாங்கப்பட்டு வரும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, 45 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முகாம் நடைபெறும் இடங்களில் கலந்து கொள்ளும்போது, பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே முகாம்கள் நடத்தப்பட்டு கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு வழிவகை செய்த முதல்வருக்கு தங்களது நன்றி என எங்களிடம் தெரிவிக்கின்றனர்.
இந்த முகாம் பொதுமக்களிடம் பெரிய வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
கரூரில் புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் ஏலம் விடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. கடைகள் தொடங்கப்பட்டவுடன் பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






; ?>)
; ?>)
; ?>)
