விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் விடத்தக்குளம் ஊராட்சியில் விடத்தக்குளம் மேலேந்தல் வி.புதூர் மூலக்கரைப்பட்டி நல்லதரை N.புதுப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் திருச்சுழி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புகழேந்தி பத்மினி மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபாண்டி வட்டாட்சியர் சிவக்குமார் விடத்தகுளம் ஊராட்சி செயலாளர் சிக்கந்தர்கனி மிதளைக்குளம் ஊராட்சி செயலாளர் போஸ் உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் முன்னாள் ஒன்றிய தலைவரும் தெற்கு ஒன்றிய செயலாளருமான பொன்னுத்தம்பி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தன பாண்டி மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரை லோகநாதன் நல்லதரை கிளைச்செயலாளர் சந்திரன் விடத்தகுளம் கிளைச் செயலாளர் முருகேசன் விடத்தகுளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா மகாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் விடத்தக்குளம் மேலேந்தல் வி.புதூர் மூலக்கரைப்பட்டி நல்லதரை N.புதுப்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.