தஞ்சாவூர் மறைமாவட்டம் புதுக்கோட்டை பங்கு ஆலங்குடி ரோடு அந்தோணியார் புறம் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய திறப்பு மற்றும் புதிய ஆலயத்தை புனிதம் செய்து திருப்பலி நடைபெற்றது

தஞ்சை மறை மாவட்ட சகாயராஜ் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தின் பங்கு தந்தையர்கள் கலந்துகொண்டு புனித அந்தோனியார் ஆலயத்தின் திறப்பு விழா நடைபெற்றது அதற்கு முன்பாக அந்தோணியார் வீதியில் இருபுறங்களிலும் குழந்தைகள் பங்கு தந்தையை வரவேற்பதற்காக பூக்களை தூவி முக்கியஸ்தர் முன்னிலையில் பங்கு தந்தையை வரவேற்றனர் அதனை தொடர்ந்து அந்தோணியார் ஆலயத்தின் திறப்பு விழா நடைபெற்றது இவ்விழாவில் பரதநாட்டிய கலைக் குழுவினர் பரத நடனமாடி பங்கு தந்தையரை வரவேற்றனர்.

பின்னர் ஆலயத்தில் பங்குத்தந்தை குத்துவிளக்கேற்றி அந்தோணியார் ஆலயத்தின் அந்தோனியார் புனித மாதா திருச்சபையில் எழுச்சி பள்ளி நடைபெற்று அதனைத் தொடர்ந்து அந்தோணியார் வழிபடும் பொது மக்களால் மற்றும் இளைஞர்களாலும் மாபெரும் அன்னதானமும் வழங்கப்பட்டது .





