• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

புனித அந்தோனியார் ஆலய திருவிழா..,

ByKalamegam Viswanathan

Jun 18, 2025

மதுரை சிந்தாமணி ரோடு சூசையப்பபுரம் பதுவை புனித அந்தோனியார் ஆலய 77 ஆம் ஆண்டு திருவிழா ஜெபம் மற்றும் திருப்பலி நடைபெற்றது.

இன்று முதல் 29ம் தேதி வரை 13 நாட்கள் பதுவை புனித அந்தோணியர் திருவிழா நிகழ்ச்சி நடைபெறும்.

மதுரை சிந்தாமணி அருகே உள்ள சூசையப்பரப்புரத்தில் பதுவை புனித அந்தோணியார் ஆலய 77வது ஆண்டு திருவிழா கொடியற்றத்துடன் துவங்கியது.

பதுவை புனித அந்தோனியார் கொடியேற்ற நிகழ்ச்சிக்காக தூய மரியன்னை ஆலய அதிபரும் பங்குத்தந்தைமான ஹென்றி ஜெரேரம் இணை பங்கு தந்தைகள் ஜோ லிவிங்ஸ்டன் அருட்பணி பெனிட்டோ ஆகியோர் தலைமையில் பதுமை புனித அந்தோணியார் கொடி தூய மரியன்னை தேவாலயத்தில் இருந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பதுமை புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலிக்கு பின் கொடியேற்றம் துவங்கியது.

திருப்பலிக்கு பின் அருட்பேராயர்களின் கூட்டுப் பிரார்த்தனை ஜெப வழிபாடு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிந்தாமணி சாமநத்தம் ,மேல அனுப்பானடி , வீட்டு வசதி வாரிய. குடியிருப்பு, வில்லாபுரம் ஆகிய பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து திருப்பலி நிகழ்ச்சியில் கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் பங்குபெற்றனர்.

சிறப்பு நிகழ்ச்சியாக வரும் 28ஆம் தேதி பதுவை புனித அந்தோணியாரின் திருத்தேர் பவனி நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும், 29ஆம் தேதி சமபந்தி விருந்தும் நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கொடி இறக்கமும் அவனைத் தொடர்ந்து திருப்பலி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

பதுவை புனித அந்தோனியரின் 77வது ஆண்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைவர் ஜேசுதாஸ் மற்றும் துணைத் தலைவர் ஜான் பீட்டர் செயலாளர் மரிய பிச்சை துணைச் செயலாளர் செல்வம் பொருளாளர் ஜெயசீலன் மற்றும் துணை பொருளாளர் ராஜா சிங் ஏற்பாடு செய்திருந்தனர் இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு திருப்பலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.