தென்காசி செங்கோட்டை நகராட்சியில் அமைந்துள்ள எஸ் ஆர் எம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். பள்ளி காம்பவுண்ட்டுக்குள் குப்பைகள் சூழ்ந்த நிலையில், துப்புறவு செய்யாமல்
மிகவும் மோசமாக உள்ளது.

பள்ளியில் சுவர்கள் அங்கங்கே வெடிப்பு உள்ளது பள்ளிக்கு வெள்ளை அடித்து
பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பள்ளிகள் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டது
பள்ளியின் மாணவர்களிடம் விசாரித்ததில் பள்ளியில் கழிவறைக்கு செல்ல முடியவில்லை.

துர்நாற்றம் அடிக்கின்றது. கழிவறைக்குள் தண்ணி வருவதில்லை நோய் பரவும் அபாயம் உள்ளது. சீரான முறையில் பராமரித்து பள்ளி மாணவர்களை மாவட்ட நிர்வாகம் காப்பாற்ற வேண்டும் என சமூக சிந்தனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.