புதுச்சேரியில் திண்டிவனம் நல்லியக்கோடன் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் வேதமந்திரங்கள் ஓத கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பக்தி பரவசம்

திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ஆண்டுதோறும் வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெறும் மாசி மகத்தில் பங்கேற்க புதுச்சேரி வருகை தருவார். பின்னர் செட்டி தெருவில் அமைந்துள்ள வடமுகத்து செட்டியார் திருமண மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதனைத்தொடர்ந்து இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தையொட்டி சீர் வரிசையுடன் ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியை எதிர்கொண்டு அழைக்கும் வைபவம் நடைபெற்றது.

தொடர்ந்து மாலை மாற்றும் வைபவம் பட்டாச்சார்யார்கள் பாராயணம் பாட வெகு விமர்ச்சியாக நடைபெற, தொடர்ந்து பெண்கள் கும்மி அடித்து கொண்டாட வேத மந்திரங்கள் ஓத ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவிக்கு மங்கள நாண் அணிவித்து திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் திருக்கல்யாண பிரசாதங்கள் வழங்கப்பட்டது.இதில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)