• Sat. Apr 26th, 2025

புதுச்சேரியில் நிரந்தர ஜாதி சான்றிதழ்.. சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு..

ByB. Sakthivel

Mar 17, 2025

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர்,..

புதுச்சேரியில் நிரந்தர சாதி சான்றிதழ் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தபட உள்ளது. நிர்வாக செயல்முறைகளை எளிதாக்கி மக்களுக்கு சேவையாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் நிரந்தர சாதி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.ஒருவருக்கு வாழ்நாளில் ஒரு முறை மட்டும் அளிக்கப்படும் இந்த சாதி சான்றிதழ் காரணமாக அரசு அலுவலகங்களுக்கு மக்கள் மீண்டும் மீண்டும் வருவது தவிர்க்கப்படும்.

மேலும் 11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியிலேயே நிரந்தர சாதி சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் அரசு அலுவலகங்கள் கூட்ட நெரிசல் குறைந்து செயல்திறன் அதிகரிக்கும் என்று கூறினார்.

அவை பேச்சு…ரங்கசாமி முதல் அமைச்சர்..

மேலும் அவர் புதுச்சேரியில் பெஞ்சல் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மீட்பு மற்றும் சீரமைப்பு செய்வதற்கு நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது.
குடிசை வீடுகளுக்கு 8000 ரூபாயும், பகுதி சேதமடைந்த கல் வீடுகளுக்கு 6,500 ரூபாய்,பகுதி சேதமடைந்த ஓட்டு வீடுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.. இதற்காக 33 லட்சத்து 78 ஆயிரத்து 500 ரூபாய் அரசுக்கு செலவு ஆகும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.