மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருக்கூடல்மலை யில் சூட்டுக்கோல் ராமலிங்கம் விலாசம் ஸ்ரீ நவநீத பெருமாள் 106 வது ஆண்டு பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. ஒரு மாதம் நடைபெறும்.

இவ்விழாவில் ஸ்ரீ நவிநீத பெருமாள் குதிரை வாகனத்தில் திரு கூடல் மலையில் இருந்து புறப்பட்டு மதுரை மாநகர் அண்ணா நகர் வண்டியூர் சிலைமான் புளியங்குளம் திருப்புவனம் திருப்பாச்சேத்தி மானாமதுரை கட்டிகுளம் மிளகனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்று வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளுக்கு செல்கிறார். அதன் ஒரு பகுதியாக அண்ணாநகர் பகுதியில் உள்ள பழமையான அதிசய ஸ்ரீ வெள்ளை விநாயகர் கோவிலுக்கு சென்ற பொழுது பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் மதுரை மாநகராட்சி துணை ஆணையாளர் சித்ரா மற்றும் தலைவர் முருகன் செயலாளர் நந்தா பொருளாளர் சங்கர்லால் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.