
மதுரை ஆரப்பாளையம் கண்மாய் கரையில் அமைந்துள்ள ஆதிமூலவர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பனைமரத்து ஸ்ரீ முனியாண்டி திருக்கோவில் ஸ்ரீ சோனி கருப்பசாமி திருக்கோவில் 65 ஆம் ஆண்டு உற்சவ விழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து 11ஆம் தேதி புதன்கிழமை சோனை கருப்பசாமிக்கு வருடாந்திர பூஜையும் பனைமரத்து முனியாண்டி சுவாமிக்கு கும்ப பூஜையும் ருத்ர ஹோமமும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து உலக நன்மை வேண்டியும் மழை பெய்ய வேண்டியும் விவசாயம் செழிக்கவும் கல்வி மேம்படவும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் கே சி திருமாறன் ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பிரகாசம் உட்பட விழா குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
