• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் திருவிழா..,

BySeenu

May 9, 2025

கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு,அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது..

கோவை வேலாண்டிபாளையம் ஆனந்தா ஹவுசிங் காலனி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30 ஆம் ஆண்டு திருவிழா கடந்த வாரம் கணபதி ஹோமம்,கம்பம் நடுதலுடன் துவங்கியது.தொடர்ந்து ஒவ்வொரு நாளும், காலை, மாலை என கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளாக,மாவிளக்கு பூஜை,பொங்கல் பூஜைபளுடன் தீபாரதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.மேலும் கோவில் தர்மகர்த்தா டாக்டர் சிவராமன் தலைமை மற்றும் ஏற்பாட்டில் குடும்பத்தினர் சார்பாக நடைபெற்ற அம்மன் திருக்கல்யாண, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் கலந்துகொண்டார்.

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் மணக்கோலத்தில், திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனை அடுத்து விழாவிற்கு வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அனைவருக்கும் பிரசாதம் மற்றும் தட்டுடன் கூடிய புடவைகள்(SAREES) வழங்கப்பட்டது.

மாநகர் மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி தலைவர், ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சிவராமன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்,*

வட்டக் கழகச் செயலாளர்கள் சிவகுமார், பொன்ராஜ், மாநகர் மாவட்ட அயலக அணி அமைப்பாளர் தி.கண்ணன்,கழக நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.