• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

தமிழக மீனவர்களைத் தாக்கி கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்..!

Byவிஷா

Oct 18, 2023

இலங்கை கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்களைத் தாக்கி ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தமிழக மீனவர்கள் நேற்று வழக்கம்போல் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, நாகை கோடியக்கரை பகுதிக்கு வந்த கடற்கொள்ளையர்கள், அங்கு மீன்பிடித்துக்கொண்டருந்த தமிழக மீனவர்கள் 9 பேரை தாக்கி விட்டு ரூ.5 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள், தங்க சங்கிலிகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட 9 மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொள்ளையர்கள், தமிழக மீனவர்களின் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள், தங்க சங்கிலியை பறித்து சென்றதுடன், தமிழக மீனவர்களை கடலில் தள்ளி சித்ரவதை செய்ததாக நாகை மீனவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு மீனவர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.