• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

Byவிஷா

Oct 18, 2023

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்காக அரசு சார்பில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 12ஆம் வகுப்பு படிக்கும் போது மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்தும் உயர்கல்வியில் சேர்வதற்கான போட்டி தேர்வுகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் இந்த கல்வியாண்டுக்கான போட்டி தேர்வு குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அக்டோபர் மாதத்தில் இருந்து பொது சட்ட நுழைவுத் தேர்வு மற்றும் அனைத்திந்திய சட்ட நுழைவுத் தேர்வு, தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் வடிவமைப்பு திறன் தேர்வு மற்றும் வடிவமைப்புக்கான இளங்கலை பொது நுழைவு தேர்வு ஆகிய தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இந்த நுழைவு தேர்வுகளுக்கான அனைத்து தகவல்களையும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.