• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் பெருந்திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த ஜூன் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

13ஆம் நாள் மண்டகப்படியையொட்டி சோழவந்தான் வடக்கு ரத வீதி வேளாளர் வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. காலை வைகை ஆற்றில் இருந்து மேளதாளம் அதிர்வேட்டுகள் முழங்க தீர்த்த குடம் எடுத்து நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து உறவின்முறை சங்கத்தில் மாரியம்மனுக்கு பால், தயிர், நெய், வெண்ணெய், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிசேகங்கள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து சுமார் 3000 திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சோழவந்தான் வடக்கு ரத வீதி வேளாளர் வெள்ளாளர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் தலைவர் சுகுமார், செயலாளர் சிவராஜன், பொருளாளர் சிங்கராஜ், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்யபிரகாஷ் , பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்ரேகா ராமச்சந்திரன், முத்துக்குமரன் நகை மாளிகை இருளப்பன்என்றராஜா உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

நேற்று மாலை 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர் இரவு ரிஷப வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது. இதில் சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து பொதுமக்கள் ஜெனகை மாரியம்மனை தரிசனம் செய்து சென்றனர். அர்ச்சகர் சண்முகம் பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்தார்.