• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வாவிடமருதூர் கிராமத்தில் ஸ்ரீ அம்மச்சி அம்மன் ஆலய 48 வது நாள் மண்டல பூஜை

ByN.Ravi

Mar 12, 2024

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூர் கிராமத்தில், ஸ்ரீ அம்மச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவையொட்டி, 48 வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. முதல் நாள் யாக சாலை பூஜையில், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் யாக வேள்விகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் காலை மங்கல இசை முழங்க மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. இதைத்
தொடர்ந்து, ராமேஸ்வரம், அழகர்கோவில், காசி, கங்கை, உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் யாகசாலையை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கருடன் வானத்தில் வட்டமிட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, 48 வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, மண்டல பூஜை விழாவிற்கு வருகை தந்த சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பூஜை மலர்களும், அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, அம்மச்சி அம்மன் கோவில் பங்காளிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.