• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மாம்பழத்தை பழுக்க வைக்க வந்தாச்சு ஸ்பிரே

Byவிஷா

Apr 23, 2024

மாம்பழத்தை பழுக்க வைக்க இனிமேல் கல்லு தேவையில்லை, கோயம்பேடு மார்க்கெட்டில் கார்பரேட் ஸ்பிரே பயன்படுத்தி மாம்பழத்தை பழுக்க வைத்து விற்பனை செய்து வருவது சோதனையின் போது தெரிய வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நமது உடலுக்கு முக்கியத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மாம்பழத்தில் அதிகமாகக் கிடைக்கிறது. அதில் பொட்டாசியம் மற்றும் நார்சத்து மிகுந்திருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.
இப்படிப்பட்ட சத்தும், சுவையும் மிகுந்த மாம்பழ சீசன் தொடங்கினால் போதும், ஒரு பிரச்சினையும் கூடவே சேர்ந்து வருகிறது. ரசாயனங்களால் பழுக்கப்பட்ட மாம்பழங்கள் தான் அந்த பிரச்சினைக்கு காரணம். குறுகிய காலத்தில் லாப நோக்கத்தில் ரசாயன கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் விற்பனை அதிகரித்து வருவதால், மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டுபிடிக்கவும், அதனை தடை செய்யவும் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் கார்பைட் ஸ்பிரே பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைத்துள்ளனர். கோயம்பேட்டில் அதிரடி சோதனையில் சிக்கியது.