• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மன அழுத்தத்திற்கு வடிகால் ஆன்மீகம் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேச்சு

ByKalamegam Viswanathan

Apr 11, 2023

மன அழுத்தத்திற்கு வடிகால் ஆன்மீகம் என்று அனுஷ உற்சவ விழாவில் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு.

மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், காஞ்சி ஸ்ரீ மகாபெரியவரின் ‘அனுஷ உற்சவம்’ மதுரை எஸ்.எஸ்.காலனி, எம். ஆர்.பி., திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அனுஷத்தி ன் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். இதில், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் ஸ்ரீ மகா பெரியவா மகிமை என்ற தலைப்பில் பேசியதாவது. முக்காலத்தில் வாழ்க்கைக்கு ஆதாரம் என்று கேட்டால் பகவான் என்பார்கள். இன்று ஆதார் எண் என்கிறார்கள்.காலம் இன்று மாறியிருக்கிறது .வயது மூப்பு வரும்போது புரியாத கவலை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. வடிகால் ஆன்மீகம் இன்றைய மன அழுத்தத்திற்கு வடிகால் ஆன்மீகம். பெண்களை நாம் இரு கண்களாக பாவிக்க வேண்டும். பெண்களை கண்ணீர் வராமல் பார்த்துக் கொள்வது ஆண்களின் கடமை. பெண்களுக்கு வீட்டை பாதுகாக்க வேண்டிய கடமை முக்கியம் உண்டு. இதிலிருந்து பெண்கள் விலகும் போது சமூகம் சிதைந்து போகும் என்றும் சொல்கிறார் மகா பெரியவர். சமைக்கும்போது பெண்கள் கோபப்படக்கூடாது முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் பசு இருந்தது வீடுகள் லட்சுமி கடாட்சமாக இருந்தது. மண்ணில் பிறந்த தாய் தன் குழந்தைகளுக்கு மட்டும் பால் கொடுக்கிறாள் பசு குறைந்தது ஆயிரம் குழந்தைகளுக்கு பால் கொடுக்கிறது தாயினும் சிறந்த தாய் பசு என்கிற மகா பெரியவர். ஒவ்வொருவரும் காலை நாலு மணி முதல் 6 மணிக்கு 7 கிரகங்கள் ஒன்றாக சேரும் நேரத்தில் ஜெபம் செய்தால் நாம் கேட்டது கிடைக்கும். எளிய வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்தால் ஒவ்வொருவருக்கும் எந்த பிரச்சனையும் வராது. பிர்லாவும் மகா பெரியவரும் மகா பெரியவர் மாதிரி ஒரு சந்நியாசியை பார்க்க முடியாது தன்னையே ஒரு பவித்திரமாக வைத்திருந்தவர். தொழிலதிபர் பிர்லா ஒரு முறை மகா பெரியவரின் எளிமையை பார்த்து வியந்து போனார். மடத்தை பளிங்கு கற்களால் அழகாக கட்டுகிறேன் என்று கேட்டபோது அதை வேண்டாம் என்று தவிர்த்து விட்டார். வேத மந்திரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. வேதத்தில் முக்கியம் யாகம் அதிலும் தியாகம் வேண்டும். அமைதி அன்பு கருணை தவம் தானம் இவை செய்தால் வாழ்க்கை வளப்படும் என்கிறார் மகா பெரியவர். சாஸ்திர சம்பிரதாயங்களை முறையாக முழுமையாக கடைப்பிடித்தவர் ஸ்ரீ மகா பெரியவர். குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை. நாம் குருவை சிக் கென பற்றிக் கொள்ள வேண்டும். மேலும் தெரியாமல் செய்த பாவத்தை போக்குவதற்கு ஒரு நாளைக்கு இரண்டு நல்லது செய்ய வேண்டும் இவ்வாறு எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் பேசினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.