• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஸ்பைஸ் ஜெட் விமானம் 8 மணி நேரம் தாமதம்..,

ByKalamegam Viswanathan

May 28, 2025

துபாயிலிருந்து மதுரை வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் எட்டு மணி நேரம் தாமதம் என விமானநிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

துபாயிலிருந்து தினமும் மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் பகல் 12:00 மணி அளவில் விமானம் மதுரை வந்தடையும் .

பின்னர் மதுரையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு 12:30 மணிக்கு புறப்பட்டு மாலை 3 மணிக்கு துபாய்க்கு செல்வது வழக்கம் ..

இந்நிலையில் துபாயிலிருந்து மதுரைக்கு வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் காலை 12 மணிக்கு வருவது ரத்தாகி மீண்டும் மாலை 6 மணி என அறிவிக்கப்பட்டது. தற்போது 8 மணி என அறிவிக்கப்பட்டுள்ளது.

8 மணி நேரம் தாமதம் எனும் அறிவிக்கப்பட்டதால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர் – மதுரையில் இருந்து துபாய் செல்வதற்கு 178 பயணிகள் புறப்பட டிக்கெட் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஸ்பைஸ் ஜெட் விமானம் இரவு 8 மணிக்கு செல்லும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. 8 மணி நேரம் விமானம் தாமதம் என்பதால் எப்போது வரும் பயணிகள் குழப்பத்தில் உள்ளனர்.