விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த தெற்கு தெரு கழுவுடை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து கழுவுடை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை, தீபாராதனை, நடைபெற்றது . இதற்கான ஏற்பாடுகளை கழுவுடை அம்மன் கோவில் கமிட்டி தலைவர் சுப்பிரமணியன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.




