• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தென் மாவட்ட பயணிகளுக்காக சென்னையில் இருந்து இன்றும் சிறப்பு ரயில்!

ByP.Kavitha Kumar

Jan 13, 2025

பொங்கல், மகரவிளக்கு பூஜையையொட்டி பயணிகளுக்காக சென்னையில் இருந்து இன்றும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பொங்கலையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் கல்வி, வேலை போன்ற பல்வேறு காரணங்களுக்காக தங்கியுள்ள மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர். இதனால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகளின் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது.

இதனால், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் தென் மாவட்ட ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பொங்கல், மகரவிளக்கு பூஜையையொட்டி பயணிகளுக்காக சென்னையில் இருந்து இன்றும் சிறப்பு ரயில்
இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இன்று இரவு சிறப்பு ரயில் (06151) இயக்கப்படுகிறது. இன்று இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், திருவனந்தபுரத்துக்கு மறுநாள் மதியம் 2 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்கிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.