புதுக்கோட்டை பாவை பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் சத்திய பிரியா ஏற்பாட்டில் புதுக்கோட்டை அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கோடைகால விடுமுறையில் புதுக்கோட்டை திலகர் திடலில் மைதானத்தில் கராத்தே சிலம்பம் குத்துச்சண்டை ஆகிய பயிற்சிகளை 1ம்தேதி முதல் 10ஆம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்களுக்கு அவர்களுக்கு பயிற்சிகள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு, மேலும் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக புதுக்கோட்டை டவுன் ஹால் மஹாலில் பாவை பவுண்டேஷன் மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது கபிர் தலைமையில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாநகராட்சி நேர்முக உதவியாளர் குமரவேல் நேரு யுவமகேந்திரா திட்ட உதவி அலுவலர் நமச்சிவாயம் மகளிர் காவல் உதவி ஆய்வாளர் தேவகி மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர் சுவாமிநாதன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் அனுராதா சீனிவாசன், சிட்டி ரோட்டரி தங்கராசு ஆகியோர்கள் கலந்து கொண்டு நற்சான்றிதழ் வழங்கினார்கள். மேலும் மாணவ, மாணவர்கள் விடுமுறை நாட்களை வீணாக்காமல் கல்வித்திறன் மற்றும் தற்காப்புகளை கற்பது அவசியம் என்று விழிப்புணர்வு யூட்டினர் நிகழ்ச்சியில் மாஸ்டர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.