• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

குடியரசு தினவிழாவிற்கு சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி இடையே இன்று சிறப்பு ரயில்

ByP.Kavitha Kumar

Jan 24, 2025

குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இந்த சிறப்பு ரயிலானது (06053) சென்னை எழும்பூரில் இருந்து 24-ம் தேதி (இன்று) இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

இந்த ரயில், தாம்பரம், விழுப்புரம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, கொடைக்கானல் ரோடு, மதுரை, சாத்தூர், வாஞ்சி மணியாச்சி, நெல்லை வழியாக கன்னியாகுமரியை வந்து சேரும்.மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து (06054) 26-ம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.