• Mon. Apr 29th, 2024

சிறப்பாக பல்வேறு துறைகளில் பணியாற்றும் காவல்துறை, காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம் (Monthly Crime Meeting) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று (22.08.2022) நடைபெற்றது.

வடசேரி காவல் நிலைய குழந்தை கடத்தல் வழக்கில் துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்க சிறந்த தகவல்களை கொடுத்து உறுதுணையாக இருந்த கேரளம் மாநிலத்தை சேர்ந்த காவல் அதிகாரி சுனில்லால், SCPO ஜோதிஸ் குமார் மற்றும் நாகர்கோயில் இரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த ASI வினோத் அவர்களுக்கும், ஆரல் வாய்மொழி காவல் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தர சிறந்த முறையில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.நடராஜன் மற்றும் அரசு வழக்கறிஞர் மதியழகன் அவர்களுக்கும், சுதந்திர தின விழா நிகழ்ச்சி சிறந்த முறையில் நிகழ உரிய ஏற்பாடுகளை செய்து காவல்துறைக்கு உதவியாக இருந்த நாகர்கோவில் வருவாய் கோட்ட அலுவலர் திரு. சேதுராமலிங்கம் அவர்களுக்கும், நீதிமன்றத்தில் வழக்குகளை விரைந்து விசாரணை செய்து முடித்திட உதவியாக இருந்த JM II Court Nagercoil அரசு கூடுதல் வழக்கறிஞர் திரு. பாலகிருஷ்ண குமார் மற்றும் JM Eraniel Court அரசு வழக்கறிஞர் திருமதி. ஸ்ரீதேவி அவர்களுக்கும்,

நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் மாவட்ட காவல்துறைக்கு உதவியாக இருந்த சர்ஜியா பிந்து அவர்களுக்கும், மூன்று கொடுங்குற்ற வழக்குகளில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்த காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராமர் அவர்களுக்கும், 21 சாதாரண குற்ற வழக்குகளில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்த தக்கலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. ஆஷா ஜவகர் அவர்களுக்கும், 10 குற்றவாளிகளுக்கு நன்னடத்த பினை பத்திரம் வாங்குவதில் சிறந்த முறையில் பணியாற்றிய இரணியல் காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர் திருமதி.விஜயலட்சுமி அவர்களுக்கும், 19 வருடம் தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்ய உதவியாக இருந்த இரணியல் காவல் நிலைய தலைமை காவலர் திரு.ஆர்லின் அருள் அவர்களுக்கும்,

அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்திய தக்கலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தாமஸ் அவர்களுக்கும், மாவட்ட தனிப்பிரிவில் கூடுதல் பொறுப்பு வகுத்த திறம்பட செயலாற்றியா மாவட்ட குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் திருமதி.சாய் லட்சுமி அவர்களுக்கு, விஐபி வருகையின் போது அவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான நுண்ணறிவு தகவல்களை சேகரித்தமைக்காக உதவி ஆய்வாளர் ரகு பாலாஜி மற்றும் புகார் மனுக்கள் மீதான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி முடித்திட உதவியாக இருந்தமைக்காக ALGSC பெண் தலைமை காவலர் திருமதி.பிரீடா FRS செயலி மூலம் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் காண உதவியாக இருந்தமைக்காக இரணியல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் வாகன தணிக்கையின் போது போது திருட்டு போன மூன்று இருசக்கர வாகனங்களை கண்டுபிடித்தமைக்காகவும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து அதை வீடியோவாக instagram-ல் பதிவிட்டவர்கள் மீது மோட்டார் வாகன பிரிவு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தமைக்காகவும் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளர் ஸ்மித் ஆல்ட்ரின், குற்ற வழக்குகள் மற்றும் விஐபி வருகையின் போது துப்பறியும் நாய் பிரிவை சிறப்பாக கையாண்டதற்காக ராஜாக்கமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தபரமாத்ம லிங்கம் தகவல்களை புதுப்பித்து, பதிவேற்றம் செய்தமைக்காக மாவட்ட காவல் அலுவலக DEO (C Section) திரு.ஜெனித் மாவட்டத்தில் உள்ள மத ரீதியான நுண்ணறிவு தகவல்களை சேகரித்தமைக்காக சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன் தாஸ், முதல் நிலைக் காவலர் அன்புராஜ், .தநேஷ், சுபின் மற்றும் காவலர் ஜான் போஸ்கோ மாவட்ட காவல்துறை சம்பந்தமான மற்றும் பல்வேறு வகையான குற்றவழக்கின் தகவல்களை சேகரிக்க உதவியாக இருந்தமைக்காக மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தைச் சேர்ந்த முதல் நிலைக் காவலர் சகாப்தீன் மற்றும் மாவட்ட ஆயுதபடையை சேர்ந்த முதல் நிலைக் காவலர் . பெரின் மற்றும் காவலர் பரத் கோதையார் மற்றும் ஆறுகாணி பழங்குடியின கிராமங்களில் கால்நடைகளைக் கொன்ற காட்டுப் புலியை பிடிக்க வனத்துறைக்கு உதவியாக செயல்பட்ட* சிறப்பு உதவி ஆய்வாளர் . பார்த்திபன், முதல் நிலை காவலர் . நாகராஜன், இரண்டாம் நிலைக் காவலர்கள் முருகேசன், சதீஷ், சுதன், வினோ, சுடலை மணி, வேலாயுத குரு மற்றும் வினிஷ் அவர்களுக்கும், மாவட்ட மானிய விலை பல்பொருள் அங்காடி (Subsidiary Canteen) மற்றும் ஆயுதப்படை உணவகத்தில் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக பெண் முதல் நிலைக் காவலர் ஆண்டோ ஜீவா மற்றும் பிருந்தா அவர்களுக்கும், 7 பைக் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 2 குற்றவாளிகளை பிடிக்க உதவியாக இருந்த மாவட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் , சிறப்பு உதவி ஆய்வாளர் மகேஷ் குமார், தலைமை காவலர்கள் முருகேஷ், பாலகிருஷ்ணன், பூட்டோ அன்ட்ரோ சிங், முதல் நிலைக் காவலர் ஆனந்த் மற்றும் காவலர் சிவகுமார் அவர்களுக்கும், குண்டாஸ் வழக்கில் தொடர்புடைய 2 குற்றவாளிகளை கைது செய்தமைக்காக ஆரல்வாய்மொழி காவல் நிலைய காவல் ஆய்வாளர் கோபி அவர்களுக்கும், பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *