• Fri. Oct 24th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

சிறப்புச் சேவைகள் துறை பத்திரிக்கை வெளியீடு..,

ByM.S.karthik

Sep 5, 2025

2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி, மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட இரண்டு சமூகப் பணி உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இப்பதவி அரசு பணி அல்ல.

விண்ணப்பதாரர் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும்.

அல்லது
குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் , 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இதற்கான விண்ணப் படிவத்தை மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது துறை சார்ந்த இணையதள முகவரியிலிருந்து https://dsdcpimms.tn.gov.in. விண்ணப்பத்தாரர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் 15.09.2025 (திங்கள் கிழமை) மாலை 5.00 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை,
எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை – 600 010.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும்.  இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.