மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கால் கச்சிராயிருப்பு கீழமட்டையான் பொட்டல்பட்டி சிவநாதபுரம் ஆகிய பகுதிகளில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்றது.

ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் வானதி வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி வாக்காளர் சரிபார்ப்பு பணி அலுவலர்கள் கங்காதேவி விஜயராணி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக்குமார் ஊராட்சி செயலாளர் விக்னேஷ் மற்றும் பணித்தள பொறுப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் டிசம்பர் 9 வரை பெயர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் ஜனவரி 8 வரை வாக்காளர் பட்டியல் தொடர்பான அறிவிப்பு டிசம்பர் 31 முதல் ஜனவரி 26 வரை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் பணி நடைபெறும் நிலையில் இதற்கான ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டது. இதில் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.











; ?>)
; ?>)
; ?>)