மதுரை அண்ணாநகர், வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில் லட்சுமி ஹயக்கீரிவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில், மாதந்தோறும் திருவோணம் நட்சத்திரத்தன்று, லட்சுமி ஹயக்கீரிவருக்கு,சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெறுகிறது. இன்று, திருவோணம் நட்சத்திரத்தன்று, லட்சுமி ஹயக்கீரிவருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெற்றது.

கோயில் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் முத்துக்குமார், மணி மாறன் மற்றும் ஆன்மீக பெண்கள் குழுவினர் செய்து இருந்தனர். இதேபோல் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, இக் கோயிலில் உள்ள வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சணைகள் நடைபெற்றது.
மதுரை தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயம், மதுரை யாணைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்தில், வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
பூஜைகளை, மணிகண்டன் பட்டர் செய்தார். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகி முருகன் மற்றும் ஆலய பரிபாலன சபை நிர்வாகிகள் செய்தனர்.
