• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

திருப்பரங்குன்றத்தில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை

ByA.Tamilselvan

Jul 17, 2022

திருப்பரங்குன்றத்தில் ஆடிமாத பிறப்பான இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் இன்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சரவணப் பொய்கை புஷ்கரணி தீர்க்கத்தத்தில் தீர்த்தம் கொடுக்கப்பட்டது.

சுப்பிரமணியசாமி திருக்கோவில் பல்லாக்கில் அஸ்வத் தேவர் எடுத்துவரப்பட்டு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.சுப்பிரமணிய சுவாமி தெய்வயானை சிறப்பு அழங்காரத்தில் அருள் பாலித்தனர். பக்தர்கள் மனதார பிரார்த்தனை செய்தனர்.