ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சி சார்பில் தமிழக வெற்றி கழகம் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சரானதை தொடர்ந்து கோவை தெற்கு மாவட்ட தவெஜ செயலாளரும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான விக்னேஷ் கதிர்வேல் பாண்டியன் அவர்களின் வெற்றியை முன்னிட்டும் ஒத்தக்கால் மண்டபத்தில் இருக்கும் ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சனைகள் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து பிரிமியர் நகர் பகுதியில் உள்ள உதவும் கரங்கள் மனநல காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் காலை உணவு ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி தமிழக வெற்றி கழகம் சார்பாக வழங்கப்பட்டது.

அதில் மதுக்கரை ஒன்றிய செயலாளர் அண்ணன் ரஞ்சித் குமார் (PRK) அவர்களின் வழிகாட்டுதலில் ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சி தமிழக வெற்றிக் கழகச் செயலாளர் திரு. செ. கார்த்திகேயன் மதுக்கரை கிழக்கு ஒன்றிய இணை செயலாளர் திரு. ந. ராஜாராமன் மதுக்கரை கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் திரு. மனோஜ் ஜெகதீசன் மதுக்கரை கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் திரு. க. ஹரிஹரன் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி இணை அமைப்பாளர் திரு. விஜயராகவன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.




