ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு திதி. நட்சத்திரம் விரதம் இருந்து வழி விடுவதற்கு ஏற்றதாக இருக்கும். அப்படி விநாயகர் பெருமாளை அருளைப் பெற சங்கட சதுர்த்தி நாள் ஏற்ற நாள் ஆகும்.
விநாயகர் சங்கட சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபடுவதால் வாழ்வில் நன்மைகள் பெருகும் அந்த வகையில் தை மாதம் விசேஷமானதாகும். பங்குனி மாதம் பெருக்கத்திற்கான மாதம் என்பதால் இந்த மாதத்தில் வரும் சங்கட சதுர்த்தி பெருக்கத்தை கொடுக்கும் விரத நாளாக கருதப்படுகிறது. திதிகளில் நான்காவது திதியாக வரும் சதுர்த்தி திதி முழு முதற்கடவுளான விநாயகர் பெருமாளுக்கு குருதி ஆகும். மாதத்தில் இரு முறை தேய்பிறையில் வரும் சதுர்த்தியை சங்கட சதுர்த்தி எனக் கொண்டாடுகிறோம். இப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் அதை வேரோடு அரித்து எரியக்கூடிய விரதம் சதுர்த்தி விரதம் ஆகும்.

பலரும் துன்பங்களை தீர சங்கட சதுரத்தில் விரதம் இருந்து வழிபடும் பழக்கம் உள்ளது. 2025 ஆம் ஆண்டில் வரும் முதல் சதுர்த்தி சங்கட சதுர்த்தியாக அதுவும் தை மாதத்தில் சங்கட சதுர்த்தி நேற்று வந்தது. இதையொட்டி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. சாத்தூர் அருகே ஓடைப்பட்டியில் அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற வன்னி விநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்ற தீப ஆராதனை நடந்தது. சிறப்பு பூஜைகளை கோவில் குருக்கள் பிரசன்னா வெங்கடேஷ் செய்திருந்தார் ஏராளமான பக்தர்கள் விநாயகரே சாமி தரிசனம் செய்தனர்.