



சாத்தூர் அருகே படந்தால் வசந்தம் நகரை சேர்ந்தவர் சங்கரேஸ்வரி இவரது மகன் சரவணன் (வயது 32) இவர் டெய்லர் வேலை பார்த்து வந்தார். நேற்று முன் தினம் மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்தவர் நெஞ்சு வலிக்குது என்று தனது அம்மாவிடம் கூறியுள்ளார். உடனே தனது மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் நிலை தடுமாறி மயங்கி கீழே விழுந்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் உதவியுடன் சரவணனை சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சரவணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். உடனே உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் சரவணன் தாய் சங்கரேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


