• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை!…

By

Aug 19, 2021

சிவகங்கையில் உள்ள ஐயப்ப சுவாமி திருக்கோயிலில் சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெற்றது.

சிவகங்கை நகர் மைய பகுதியில் புகழ்பெற்ற ஐயப்ப சுவாமி திருக்கோவில் உள்ளது. ஆவணி தமிழ் மாதத்தை முன்னிட்டு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.

இம்மாதத்தில் மூலவர் ஐயப்ப சுவாமிக்கு நெய், தேன் , திருமஞ்சனம் பொடி, மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் , இளநீர் மற்றும் பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து, சந்தன காப்பு சாற்றி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமிக்கு உதிரிப்பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்து கோபுர தீபம், சோடச உபசாரங்கள் மற்றும் மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காட்டி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.