• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நியாய விலைக் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம்

Byகாயத்ரி

Jan 7, 2022

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் காலம் ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை சிறப்பு பொது விநியோகத் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இதற்கிடையே, சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்களைப் பெற குடும்ப அட்டைதாரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும், அந்தத் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஆணையர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.அவருடைய கோரிக்கையை ஏற்று, சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, நடப்பு ஜனவரி மாதம் முதல் வரும் மார்ச் மாதம் வரை சிறப்பு பொது விநியோகத் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் தெரிவித்துள்ளார்.