• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

ByKalamegam Viswanathan

Mar 26, 2023

பேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் மற்றும் நிதிஅமைச்சருக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.


மதுரை மாவட்டம் புனித ஜார்ஜ் பேராலயத்தில், ஆலயத்தின் செயலர்.ஆந்தர் ஆசீர்வாதம் தலைமையில் , இந்த பேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு ,
தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கும், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, இந்த பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு முதல்வருக்கும், நிதி அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.