உலகில் மனிதனாய் பிறந்து மக்களின் பாவங்களை போக்க சிலுவையில் அடிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வாழ்வை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சி.எஸ்.ஐ ஹென்றி லிட்டில் ஆலயத்தில் 40 நாட்கள் கிறிஸ்துவர்கள் தவக்காலம் மேற்கொண்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. அதன் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை அன்று புனித வெள்ளி இயேசுவை சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் ஆராதனையும் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் உபவாசத்துடன் பங்கேற்றனர்.
இதையடுத்து இன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து மூன்று நாள் உயிர்த்தெழுந்த மீண்டும் கொண்டாடுவது ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் அதிகாலை 4.30 மணி முதல் தொடங்கியது ஆராதனை நடைபெற்றது.
இதை ஒட்டி அனைத்து ஆலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக ஆராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆயர்கள் ராஜமாணிக்கம்,ஜான் வெஸ்லி, அருள் பிரபாகரன், அன்புச் செழியன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆண்கள் ,பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர்.




