• Wed. May 1st, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கான பிரத்யோக குடிநீர் திட்டப் பணிகள்

ByKalamegam Viswanathan

May 27, 2023

11 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 1191 ஊரக குடியிருப்புகளுக்கான 3 கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்:
வைகை ஆற்றின் கரைப்பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலம் அறிஞர் அண்ணா மாளிகை 50-ஆம் பொன்விழா நுழைவுவாயில் என, மொத்தம் ரூ.2084.08 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு , தொடங்கி வைத்தார்கள்
மதுரை, ஓபுளாபடித்துறை அருகே இன்று (27.05.2023) நடைபெற்ற விழாவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மதுரை மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 1191 ஊரக குடியிருப்புகளுக்கான 3 கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, உசிலம்பட்டி நகராட்சிக்கான பிரத்யோக குடிநீர் திட்டப் பணிகள், மதுரை மாநகராட்சி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் கரைப்பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலம், அறிஞர் அண்ணா மாளிகை 50-ஆம் பொன்விழா நுழைவுவாயில் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் தலைமை வகித்தார்கள்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலர் திரு.ஷிவ் தாஸ் மீனா, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா , மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு , பேசுகையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த இரண்டாண்டுகளில் தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மதுரை மாநகராட்சியில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.188.22 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள். ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள். ரூ.21.74 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு வாகனங்கள். ரூ.15.31 கோடி மதிப்பீட்டில் தெரு விளக்குகள்.ரூ.347.83 கோடி மதிப்பீட்டில் குடிநீர் பணிகள். ரூ.52.28 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகள் மேம்பாட்டு பணிகள். 69 இலட்சம் மதிப்பீட்டில் பூங்காக்கள். ரூ.5 கோடி மதிப்பீட்டில் மின் மயானம். ரூ.2.88 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம். ரூ 14.37 கோடி மதிப்பீட்டில் சந்தைகள். ரூ. 6.93 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள். ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையங்கள். ரூ.2.33 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டிடங்கள் பராமரிப்பு. ரூ.54.80 கோடி மதிப்பீட்டில் இதரப் பணிகள் ஆக மொத்தம் ரூ.717. 10 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில், இன்னும் பல்வேறு பணிகள் மேற் கொள்ளப்படவுள்ளன.
மேலூர், திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி ஆகிய நகராட்சிகளில் ரூ. 27.25 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள். ரூ.7.87 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள். ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு வாகனங்கள்.ரூ.9.02 கோடி மதிப்பீட்டில் தெரு விளக்குகள். ரூ.2.12 கோடி மதிப்பீட்டில் குடிநீர் பணிகள். ரூ.4.43 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகள் மேம்பாட்டு பணிகள், ரூ. 2.64 கோடி மதிப்பீட்டில் பூங்காக்கள். ரூ.9 இலட்சம் மதிப்பீட்டில் மின் மயானங்கள்.ரூ.27.13 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம். 7.87 கோடி மதிப்பீட்டில் சந்தைகள். ரூ. 1.88 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையங்கள் ரூ. 2.36 கோடி மதிப்பீட்டில் இதரப் பணிகள் ஆக மொத்தம் ரூ.95.04 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில், உள்ள 9 பேரூராட்சிகளில், ரூ.22.37 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள்,
ரூ.6.01 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள்,ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு வாகனங்கள். ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் தெரு விளக்குகள். ரூ. 38.80 கோடி மதிப்பீட்டில் குடிநீர் பணிகள். ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகள் மேம்பாட்டு பணிகள். ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் பூங்காக்கள். ரூ.4.38 கோடி மதிப்பீட்டில் மின் மயானங்கள். ரூ.2 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையங்கள். ரூ. 1.82 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையங்கள். ரூ.19.07 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள். ரூ.4.44 கோடி மதிப்பீட்டில் இதரப் பணிகள் ஆக மொத்தம் ரூ. 107.46 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக ரூ.82 கோடி மதிப்பீட்டில் 1.23 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் 2 குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரூ.1926.70 கோடி மதிப்பீட்டில் 14.79 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் 3 குடிநீர் திட்டங்கள் செயலாக்கத்தில் உள்ளன. ஆக மொத்தம் ரூ.2008.7 கோடியில் பணிகள் மேற்
கொள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இன்னும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தமிழகத்தில், ஆறுகளில் கழிவு நீர் கலக்காமல் தடுத்து தூய்மையாக பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். அடையாறு,பக்கீம் ,
கூவம் போன்ற ஆறுகளில் கழிவு நீர் கலக்காமல் தடுத்திடும் வகையில் மறுசுழர்ச்சி செய்து பயன்படுத்துதல் போன்ற பணிகளுக்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. வைகையாற்றில் கழிவு நீர் கலக்காத வகையிலும் நடவடிக்கைகள் எடுக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என, மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசினார்கள்.தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு , மதுரை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற 10 பணியாளர்களுக்கு ரூ.13.36 கோடி மதிப்பீட்டில் ஓய்வூதிய பணப்பலனுக்கான ஆணைகளை வழங்கினார். நடைபெற்ற நிகழ்ச்சியில்,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி , நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.பொன்னையா, சென்னை பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குர்ராலா, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் , சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, (மதுரை வடக்கு), ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) , மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) , மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.செ.சரவணன மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநிதி , மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *