தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் முக்கிய பகுதியாக ஒவ்வொரு வாரமும் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனால் தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது என அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 8ஆம் தேதி மீண்டும் மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும், முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போடாத 2கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.






; ?>)
; ?>)
; ?>)
