புகையிலை விளம்பரத்தில் நடிக்க மறுத்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிறந்த ,வளர்ந்தவர்.நான் தமிழன் தான் எனவும் பலமுறை பேசி வருபவர் அல்லுஅர்ஜூன். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர். சமீபத்தில் அவர் நடித்த புஷ்பா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ஊ அண்டவா, ஏ சாமி ஆகியப் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் புகையிலை விளம்பரம் ஒன்றில் நடிக்க, அல்லு அர்ஜுனுக்கு கோடிகளில் சம்பளம் பேசப்பட்டது. ஆனால் நான் புகையிலை விளம்பரத்தில் நடித்தால், எனது ரசிகர்கள் தவறான பாதையில் செல்ல வாய்ப்புள்ளது, என்று அந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்தார்.
இதனையடுத்து பிரபலங்களும், தமிழ் மற்றும் தெழுங்கு ரசிகர்களும் அல்லு அர்ஜுனை வெகுவாக பாராட்டினர். இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ”புகையிலை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க பெருந்தொகையை ஊதியமாகத் தருவதாக ஆசை காட்டப்பட்ட போதிலும், சமூகக் கேடுகளை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜுன் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது! என பாராட்டினார்.
அல்லு அர்ஜுனை… பாராட்டிய அன்புமணி ராமதாஸ்!
