“வந்தே மாதரம்” பாடல் உருவாகி 150 ஆண்டுகள் நிறைவு பெறும் சிறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் வந்தே மாதரம் பாடலை பாடி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் பாஜக மாவட்ட தலைவர் முருகதாஸ் தலைமையில் தனியார் பள்ளியில் 150 பள்ளி மாணவர்களை கொண்டு “வந்தே மாதரம்” பாடலை ஒருமித்த குரலில் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வந்தே மாதரம் பாடலை சிறப்பாக பாடினார்கள். இதில் பள்ளி ஆசிரியர்கள், பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் கனக துர்கா மணிமேகலை சங்கீதா நிர்மலா ராஜேஸ்வரி நாகராணி தேவி பாலாஜி காந்திமதி ராஜம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பட்டினை பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி மாவட்ட தலைவி செந்தில் நாயகி சிறப்பாக செய்திருந்தார்.








