சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, தமிழகத்தில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாலை அணிந்து ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். முக்கியமான விசேஷ நாட்களில் மட்டும் சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் திறக்கப்படும். இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக நவம்பர் 15 முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை பம்பைக்கு தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தற்போது அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, கடலூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து அதிநவீன சொகுசு பேருந்துகள், ஏசி இல்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
மேலும் அதே சமயத்தில் டிசம்பர் 26 முதல் 29 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பம்பைக்கு தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
