• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

பொய்யாத மூர்த்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்..,

ByM.I.MOHAMMED FAROOK

May 16, 2026

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் நான்கு தொகுதிகளை என்.டி.ஏ கூட்டணி கைப்பற்றி உள்ளது. மேலும் மாவட்டத்தில் முதன்முறையாக இரண்டு பாஜக வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியில் ஜி.என்.எஸ்.ராஜசேகரன், நிரவி திருப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதனை கொண்டாடும் விதமாக காரைக்கால் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் ஆலயத்தில் இன்று வைகாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் திருநள்ளாறு சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் மாவட்டத் தலைவர் முருகதாஸ், இளங்கோவன் மற்றும் ஐந்து தொகுதியின் பாஜக தொகுதி தலைவர்கள் முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் சிறப்பு அபிஷேக ஆராதனையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினர்.